செவ்வாய், 23 மார்ச், 2010
போரை விட அதிக மக்களை கொல்லும் அசுத்த நீர்- ஐ.நா. பகீ்ர்!
உலகில் போரால் ஏற்படும் உயிரிழப்புகளை விட மிக அதிக அளவிலான உயிர்களைப்
பறித்து வருகிறது மாசடைந்த குடிநீர் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்
கூறியுள்ளார். பாதுகாக்கப்படாத, அசுத்தமான, மாசடைந்த குடிநீரைக் குடித்து
உயிரிழப்போரின் எண்ணிக்கை, போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவில் இருப்பதாக
மூன் கவலை தெரிவித்துள்ளார்.
நைரோபியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மனித குலத்தை வேகமாக அழித்து வரும் மாபெரும் ஆயுதமாக மாறி நிற்கிறது மாசடைந்த
குடிநீர். இது போரினால் ஏற்படும் உயிரிழப்பை விட அதிக அளவிலான உயிர்களைப் பறித்து
வருகிறது.
புவிவெப்ப மாற்றம் காரணமாக சுகாதாரமான குடிநீர் கிடைப்பது
அரிதாகி வருகிறது. அசுத்தமான மாசு படிந்த நீரைக் குடிப்பதால் பல்வேறு வியாதிகளுக்கு
உலக மக்கள் ஆளாக நேரிடுகிறது. இது உயிரிழப்பில் போய் முடிகிறது.
குடிநீர்ப்
பற்றாக்குறை, அசுத்தமான குடிநீர் ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை
மக்கள்தான். இந்த அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம் என்றார்
மூன். உலக தண்ணீர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மேற்கண்டவாறு பேசினார்
பான் கி மூன்.
0 comments:
கருத்துரையிடுக