ஞாயிறு, 21 மார்ச், 2010

இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரத் தரப்பு அண்மைக்காலமாக ஏராளமான பலஸ்தீன் வீடுகள், கடைகள், கட்டடங்களைத் தகர்த்து வருகின்றது என்பதும் இஸ்ரேல புதிதாக 50000 ஆயிரம் -ஐம்பதாயிரம்- புதிய குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலத்தின் அல் குத்ஸ் பகுதில் அமைக்க திட்டமிட்டுள்ளதுடன் 1600 குடியிருப்புகளை கிழக்கு ஜெருசலத்தின் நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கபடுகின்றது إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ-

0 comments:

கருத்துரையிடுக