ஞாயிறு, 21 மார்ச், 2010
துப்பட்டா அணியாத மாணவிகளுக்கு அபராதம்!
பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் துப்பட்டா அணியாமல் கல்லூரிக்கு வரும்
மாணவிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கட்டுப்பாடு
விதித்துள்ளது. கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு ஜீன்ஸ், டாப்ஸ்
பனியன் அணிந்து வருகின்றனர். இதனால் பல கல்லூரிகளில் மாணவர்கள் மாணவிகளை கிண்டல்
செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று
கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தியும் மாணவிகள் அதை கண்டுகொள்ளாமல்
அலட்சியப்படுத்துகின்றனராம்.
இதையடுத்து எந்த உடை அணிந்து வந்தாலும் கண்டிப்பாக
துப்பட்டா அணிய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்
என்றும் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
இதனால் அந்த கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். இந்தக் கல்லூரியைப் பின்பற்றி இதர கல்லூரிகளும் இதேபோன்ற
கட்டுப்பாட்டை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக