நன்றி: இந்நேரம்
வியாழன், 18 மார்ச், 2010
உலகம் முழுவதும் பள்ளிகளில் பெப்சி (PEPSI) விற்பனை நிறுத்தம்
பெப்சிகோ (புகழ்பெற்ற குளிர்பானம் பெப்சியை தயாரிக்கும் நிறுவனம்) உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இனி தனது கேடு விளைவிக்கும் சர்க்கரை கலந்த, அதிக கலோரியுள்ள உணவு பொருட்களின் விற்பனையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
உணவு தயாரிப்பில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் நிறுவனம் பெப்சிகோ. (முதல் இடம் கோக்கோ-கோலா என்பது குறிப்பிடத்தக்கது.) மிரிண்டா(Mirinda), செவென்-அப்(7up), லேஸ்(Lays), க்வார்க்கர்(Quarker) போன்றவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்தின் சர்க்கரை கலந்துள்ள மேலும் அதிக கலோரியுள்ள பொருட்களை உலகில் 200 நாடுகளின் உள்ள பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஏனெனில் இந்த உணவு பொருட்களை உட்கொள்வதினால் பள்ளி பயிலும் குழந்தைகள் அதிக பருமானாதல், சர்க்கரை நோய், இருதய பிரச்சனைகள் போன்ற உடல் கேடுகள் அடைகிறார்கள் என உலக இருதய ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் சக்கரை கலக்காத உணவு பொருட்களான அக்வா ஃபினா (Aqua fina), பால் போன்றவற்றின் விற்பனை தொடரும்.
உலக இருதய ஆராய்ச்சிக்கழகம் சென்ற ஆண்டு அறிவுறித்தியதை தொடர்ந்து அமெரிக்க பள்ளிகள் இந்த விதிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளன இந்த விதிமுறையை தொடர்ந்து கோக்க-கோலா நிறுவனமும் எந்த பள்ளியிலும் பெற்றோர்கள், மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டால் தவிர அதிக கலோரி, மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில்லை என்று இம்மாதம் முதல் முடிவு செய்துள்ளது ஆனால் அது மேல்நிலை பள்ளிகளுக்கு பொருந்தாது.
ஆனால் உலக இருதய ஆராய்ச்சி நிறுவனம் எல்லா கலோரி, மற்றும் சக்கரை கலந்த பொருட்களையும் பள்ளிகளில் விற்பனை செய்வதை நிறுத்த அறிவுறித்தியுள்ளது.
நன்றி: இந்நேரம்
நன்றி: இந்நேரம்
0 comments:
கருத்துரையிடுக