வியாழன், 18 மார்ச், 2010

அழிவுப் பாதையில் பாஜக
பாஜகவில் மீண்டும் பதவி குழப்பம் - சத்ருகன் சின்ஹா அதிருப்தி

பாஜகவின் சமீபத்திய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து நடிகரும், மூத்த தலைவருமான சத்ருகன் சின்ஹா அதிருப்தி தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும், தகுதியில்லாதவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவராக இருந்து வெளியேறிய யஸ்வந்த் சின் ஹா போன்றவர்களுக்கு கட்சி பொறுப்பு கொடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் பீகார் மாநிலத்தில், அம்மாநிலத்தின் மூத்த தலைவரான சின் ஹாவை புறக்கணித்திருப்பது முறையான செயல் என்றார்.
கட்சி தலைவர் நிட்காரி, நியமனத்திற்கு முன், தன்னையையோ அல்லது மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜையோ கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்தார். கடந்த சில மாதங்களக ஒய்ந்து போயிருந்த பதவி குழப்பம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
நன்றி: இந்நேரம்

0 comments:

கருத்துரையிடுக