சனி, 13 மார்ச், 2010
றீஹல் கோரி -Rachel Corrie- பலஸ்தீன மக்களுக்காக தன் உயிரை தியாகம் செய்த அமெரிக்க பெண்
றீஹல் கோரி -Rachel Corrie-பலஸ்தீன மக்களுக்காக தன் உயிரை தியாகம் செய்தஅமெரிக்க பெண் இவர் அமெரிக்க வோசிங்டன் ஒலிம்பியா பகுதியை சேர்ந்த ஒரு இளம் பட்டதாரி இவர் “International Solidarity Movement,”என்ற அமைப்பின் ஒரு உறுபினராக பலஸ்தீன் சென்றார் ஆனால் இவர் திரும்பி அமெரிக்க செல்லவில்லை.
23 வயது ஆனா இந்த இளம் பெண் காஸா நப்லுஸ் பகுதியில் 2003 ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி இஸ்ரேல இராணுவ தாங்கி ஒன்றால் மிதித்து படுகொலை செய்யபட்டார் இஸ்ரேல பயங்கரவாதம் காஸா நப்லுஸ் பகுதியில் பலஸ்தீன மக்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு உடைத்து அழித்து கொண்டு இருந்த போது இவர் ஒரு வீட்டின் முன் நின்று புல்டோச்சர்களை தடுத்து நிறுத்த முற்பட்டார் இஸ்ரேல பயங்கரவாதத்தை சாத்வீக முறையில் தடுக்க முற்பட்டார் வீடுகளை உடைத்து கொண்டு முன்னேறி வந்த இராணுவ தாங்கி ஒன்றால் மிதித்து படுகொலை செய்யபட்டார் பலஸ்தீன மக்களின் வீடுகளை பாதுகாக்க தன்னை அற்பணித்தார் இவரின் தியாகத்தை பலஸ்தீன மக்கள் என்றும் நினைவு கூறுகின்றனர் இந்த மாதம் 16 ஆம் தியதி இவர் கொல்லபட்டார் என்பது குறிபிடதக்கது.
0 comments:
கருத்துரையிடுக