புதன், 28 ஏப்ரல், 2010
அமெரிக்க ராணுவத்துக்கு பெட்ரோல் ஏற்றிசென்ற 12 லாரிகளுக்கு தீ வைப்பு ஆப்கானிஸ்தானில் மக்கள் ஆத்திரம்
ஆப்கானிஸ்தானில் லோகார் மாநிலத்தில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவத்துக்கு பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்று கொண்டு இருந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கும்பலாக திரண்டு சென்றனர். அவர்கள் அந்த லாரிகளுக்கு தீ வைத்தனர். இதில் 12 லாரிகள் தீயில் எரிந்தன. அவற்றில் பெரும்பாலானவை பெட்ரோல் லாரிகளாகும்.
கடந்த வாரம் அந்த மாநிலத்தில் தீவிரவாதிகளை தேடிக்கண்டு பிடிக்கும் வேட்டையில் ஆப்கானிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டன. வீடு வீடாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பொதுமக்கள் அதற்கு பழி தீர்க்கும் வகையில் இப்படி தாக்குதலை நடத்தினார்கள்.
நன்றி:குறிஞ்சி தமிழ்
Labels:
ஆப்கானிஸ்தான்
0 comments:
கருத்துரையிடுக