சனி, 17 ஏப்ரல், 2010
பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே 2 குண்டுகள் வெடிப்பு-8 பேர் காயம்!
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தின் சுற்றுச் சுவரில் பிளாஸ்டிக்
பையில் வைக்கப்பட்டிருந்த இரு குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 8 பேர்
காயமடைந்தனர். கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும்,
ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த
குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்
பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து
சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர்
காயமடைந்துள்ளனர். பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர்.
இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார்.
குண்டுவெடிப்பால்,
ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந்துள்ளது. அங்கு கிடக்கும் சிதறல்களை வெடிகுண்டு
நிபுணர்கள் சேகரித்து சோதனையை தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்தபோது
ஸ்டேடியத்திற்குள் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் இருந்தனர். குண்டுவெடிப்பு க்குப் பின்னரும் அனைவரும் ஸ்டேடியத்திற்குள்ளேயே அமர
வைக்கப்பட்டனர்.
குண்டுகள் வெடித்தவுடன் இரு அணிகளின் வீரர்களும், டிரஸ்ஸிங்
ரூமிலேயே இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். போலீஸாரும் பெருமளவில்
குவிக்கப்பட்டு ஸ்டேடியம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீவிர சோதனை
நடந்தது. முன்னதாக டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும், ஜெனரேட்டர் அதிக சூடாகி
விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. பின்னரே இவை குண்டு வெடிப்புகள் என்று
தெரியவந்தது. இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும்,
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்குவதாக இருந்தது. இருப்பினும்
குண்டுவெடிப்பு காரணமாக ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு ஐந்து மணிக்குத்
தொடங்குகிறது.
0 comments:
கருத்துரையிடுக