சனி, 17 ஏப்ரல், 2010

நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில்வே பாதை மின்மயமாகிறது.


திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் ராஜீவ் தத் சர்மா நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:
திருவனந்தபுரம் கோட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.836.88 கோடி மொத்த வருவாய் ஈட்டி தென்னக ரயில்வேயில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய வருடத்தை விட இது 11 சதவீதம் அதிகமாகும்.கடந்த நிதியாண்டில் 98.1 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். முந்தைய நிதியாண்டை விட பயணிகள் வருவாய் மூலம் ரூ.35 கோடி அதிகமாக கிடைத் துள்ளது.
பார்சல் மூலம் கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானம் ரூ.26.66 கோடியாகும். இது முந்தையை ஆண்டை விட ரூ.3 கோடி அதிகமாகும்.நாகர்கோவில் &மங்களூர் இடையே தற்போது வாரத்தில் 3 முறை இயக்கப்படும் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தினசரி ரயிலாக இயக்க தீர்மானிக்கப் பட்டு ள்ளது.

நாகர்கோவில் -திருவனந்தபுரம் இடையேயான மின்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.இப்பணிகளை ஒரு வருடத்தில் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையிலும் மின்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்பணிகளையும் விரைந்து முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொல்லம் - புனலூர் இடையேயான 45 கி.மீ. அகலப்பாதை பணிகள் முடிந்து விட்டன. இந்தப் பாதையில் பாதுகாப்பு ஆணையரின் பரிசோதனையும் முடிந்து விட்டது. விரைவில் இப்பாதையில் ரயில்கள் ஓடத்தொடங்கும்.
நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான பணிகள் நடத்தி முடிக்கப்படும். இந்த ரயில் நிலையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக