திங்கள், 26 ஏப்ரல், 2010

எமிரேட்ஸ் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்

ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமான ஓட்டிகள் சாதுர்யமாக இயக்கி தரை இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமீபத்ததில் போலந்து நாட்டை சேர்ந்த அதிபர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் நடந்து முடிந்து சில நாட்களுக்கு மீண்டும் ஒரு கோரச்சம்பவத்தில் இருந்து இந்த விமானம் தப்பியிருக்கிருக்கிறது என்பது நிம்மதி. கொச்சியில் இருந்து இன்று காலை துபாய் நோக்கி புறப்பட்ட விமானம் கோவா வான்வெளியில் சென்று கொண்டிருந்த போது அங்கு காற்று வெற்றிடம் ஏற்பட்டது. அழுத்தம் மற்றும் அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டு அந்த வட்டத்திற்குள் சிக்கிய விமானம் தடுமாறியது. பயணிகள் பதறினர். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூர உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழ் நோக்கி தள்ளப்பட்டது. 2 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வருவதற்குள் விமான ஓட்டிகள் சாதுர்யமாக விமானத்தை நிலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவசர , அவசரமாக கொச்சி நோக்கி சென்று தரையிறக்கினர். இருப்பினும இந்த இதில் பயணித்த 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 361 பயணிகள் இருந்துள்ளனர். விமானிகள் சுதாரித்திருக்காவிட்டால் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறி இருக்கும். விபத்தில் சிக்கியிருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். இதனால் கொச்சி விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து துபாயில் இருந்து பயணிகள் நிலை குறித்து உறவினர்கள் போன் மூலம் விசாரித்து வருகின்றனர். 
 http://www.dinamala r.com/

0 comments:

கருத்துரையிடுக