சனி, 24 ஏப்ரல், 2010

பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவல் உ.பி. போலீஸுக்கு முன்பே தெரியும் – ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா

யோத்தியில் பாபர் மசூதியை பாஜகவினரும், சங் பரிவார் அமைப்பினரும் இடிக்கப் போவது குறித்த உளவுத் தகவல் ஏற்கனவே உ.பி. போலீஸாருக்குத் தெரியும் என்று ரேபரேலி கோர்ட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா கூறியுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் அஞ்சு குப்தா. சமீபத்தில் இவர் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் ரேபரேலி முதன்மை ஜூடிசியல் கோர்ட்டில் குறுக்கு விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி குலாப் சிங்கிடம் அஞ்சு குப்தா கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உளவுத் தகவல் பைசாபாத் போலீஸாரிடம் இருந்தது. பைசாபாத் ஐஜியாக இருந்த ஏ.கே.சரண் டிசம்பர் 5ம் தேதி ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அப்போது பாபர் மசூதி இடிப்பு தொடர்பான சில முக்கிய உளவுத் தகவல்கள் குறித்து அவர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தது. அப்போது இரு முக்கிய மிரட்டல் கள் பாபர் மசூதிக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் குழுமியிருந்த கூட்டத்தினர் பாபர் மசூதி மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்பது ஒரு மிரட்டல். இன்னொன்று, இந்தக் கூட்டத்தை சாக்காக வைத்துக் கொண்டு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவினர் நாச வேலையில் ஈடுபடக் கூடும் என்பது என்றார் அஞ்சு குப்தா

0 comments:

கருத்துரையிடுக