வியாழன், 22 ஏப்ரல், 2010

தொடர்ந்து 3 ஆண்டு விண்ணப்பித்தால் ஹஜ் பயணத்துக்கு நேரடி அனுமதி.


தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பயணத்துக்காக மனு செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. ஹஜ் பயணத்துக்காக இந்தியாவிலிருந்து 1,23,211 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். எல்லா மாநிலங்களுக்கும் இந்த எண்ணிக்கை பிரித்து தரப்படுகிறது.
டிக்கெட், தங்குமிடம் ஆகியவற்றை மத்திய அரசே புக்கிங் செய்து கொடுத்து விட்டு, பயணம் செல்பவர்களிடம் பின்னர் வசூலிக்க வகை செய்ய வேண்டும் என்று ரவிக்குமார் கோருகிறார். இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். 2006ல் 9,600 பேர் ஹஜ் பயணத்துக்காக மனு செய்தார்கள். 2008ல் 10,500 பேர் மனு செய்தார்கள். 2009ல் 14,710 பேர் மனு செய்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயணிகள் அனுப்பப்படுகிறார்கள். தமிழகத்துக்கு இருந்த ஒதுக்கீடு 2,700தான். 3 ஆண்டுகள் தொடர்ந்து மனு செய்பவர்களுக்கு, குலுக்கல் முறையில் இல்லாமல் அவர்களுக்கு நேரடியாக அனுமதி அளிக்க, இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடக்கிறது.
இந்த மாதம் 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 30ல் விண்ணப்ப தேதி முடிகிறது. மேலும் 25,000 ஹஜ் பயணிகளை இந்தியாவிலிருந்து அனுப்ப அனுமதி கோருமாறு உறுப்பினர் அசன் அலி கோருகிறார். இதுகுறித்து முதல்வரிடம் பேசி மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும். - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான்

0 comments:

கருத்துரையிடுக