புதன், 21 ஏப்ரல், 2010

குமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை.


குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடி-மின்னலுடன் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வானம் மப்பும் மந்தாரமுமாக மாறியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலையில் இருந்து இரவு வரை இடி-மின்னலுடன் மழை கொட்டியது.
தக்கலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை இடி&மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வில்லுக்குறி பகுதியில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மழை கொட்டியது. 
மேற்கு மாவட்டத்தில் குலசேகரம், பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மழை பெய்தது. மார்த்தாண்டம் உள்பட மற்ற பகுதிகளில் லேசான தூறல் போட்டது. மழை பெய்த நேரத்தில் அந்த பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.
நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை பகுதியிலும் மழை கொட்டியது. அதே நேரம் நாகர்கோவிலில் மழை ஏமாற்றி விட்டது. நேற்று மாலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. பலத்த மின்னலுடன் இடியோசை முழங்கியது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் மழை லேசாக தூறியது. எனினும் இந்த மழை ஓரளவு குளிர்ச்சியை ஏற்படுத்தியது.  

0 comments:

கருத்துரையிடுக