வெள்ளி, 30 ஏப்ரல், 2010
மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. கோடைகாலத்தில் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும் காலம், அக்னிநட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இது வரும் மே 4ல் தொடங்கி மே 28 வரை 24 நாட்கள் ஞிடிக்கிறது. தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் வரை கோடைகாலம் ஆகும். மார்ச் மாதம் முதல் சூரியனின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இது படிப்படியாக உயர்ந்து அக்னிநட்சத்திர காலத்தில் சூரியனின் வெப்ப கதிர்கள் செங்குத்தாக தமிழகத்தின் மீது விழுகிறது. இந்த நாட்களில் தினசரி 104 டிகிரி முதல் 110 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் இருக்கும், கடந்தாண்டு அக்னி நட்சத்திரத்தின்போது அதிகபட்சமாக சேலத்தில் 108 டிகிரியும், மதுரையில் 107 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது.
அதிக வெப்பத்தால் உடலில் கொப்பளம் போன்று மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும். வெயிலில் அலைந்து வந்தவுடன், வியர்வையுடன் இருக்கும் போது தண்ணீர் குடிக்க கூடாது. தினசரி இரண்டு வேளை குளிக்க வேண்டும். நடந்து செல்வோர் குடையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் மாலை நேரத்தில் இரண்டு முறை தண்ணீர் தெளித்து சூட்டை குறைக்கலாம். கவனத்துடன் நடந்து கொண்டால் அக்னி நட்சத்திரத்தின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக