வெள்ளி, 30 ஏப்ரல், 2010

முஸ்லிம்களுக்கு 10 விழுகாட்டு இட ஒதுக்கீடு சென்னை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானம்.


சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய சிறுபான்மை மக்களின் கோரிக்கை மாநாட்டில், கல்வில் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெற்று சென்னையில் நடந்த இந்த மாநாட்டிற்கு மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளின் படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தலித் கிறிஸ்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உருது மொழி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். செயல் படாமல் இருக்கும் உருதுப் பள்ளிகளி சீர்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினர் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கவேண்டும். ஆகியவை உள்ளிட்ட பல தீர்மானங்களை நேற்று மார்க்சிஸ்ட் கட்சி நிறைவேற்றியது.

நன்றி : webdunia

0 comments:

கருத்துரையிடுக