வெள்ளி, 16 ஏப்ரல், 2010
இந்தியாவில் கழிவறைகளை விட மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகம்: ஐ.நா.
இந்தியாவில் கழிவறைகளை விட மொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகைக்கொண்ட நாடான இந்தியாவில், போதுமான கழிப்பிட வசதி இல்லாத மக்களின் எண்ணிக்கையை குறைப்பது எப்படி? என்பது குறித்து ஆய்வை ஐ.நா. மேற்கொண்டது.
இந்த ஆய்வில்தான் மேற்கூறிய விவரம் தெரிய வந்தது.இந்திய மக்கள் தொகையில் பாதிபேரிடம் செல்போன் உள்ளது.ஆனால் அடிப்படை தேவையான சுகாதாரமான கழிப்பறை வசதி பாதிபேரிடம் கூட இல்லை. இந்திய மக்களில் 545 மில்லியன் பேரிடம் - 54.5 லட்சம் - அல்லது 45 விழுக்காட்டினரிடம் செல்போன் உள்ளது.ஆனால் 366 மில்லியன் - 36.6 லட்சம் - மக்களிடம் அல்லது 31 விழுக்காட்டினரிடம் மட்டுமே செல்போன் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இத்தகவலை தண்ணீர் மற்றும் சுற்றுச் சூழலுக்கான ஐ.நா. பல்கலைக்கழகத்தின் நிறுவன இயக்குனர் ஷப்தார் அதீல் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக