திங்கள், 17 மே, 2010
கோவா குண்டுவெடிப்பு - இந்து தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது குற்றப்பத்திரி.
கோவா குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்து தீவிரவாத அமைப்பான சனாதன்
சன்ஸ்தாவுடன் தொடர்புடைய நால்வர் உள்பட 11 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி
குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்துள்ளது. 11 பேரில் ஏற்கனவே நான்கு பேர் கைது
செய்யப்பட்டு விட்டனர். நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்.
சந்தேகப்பட்டியலில்
இடம் பெற்றிருந்த மல் கொண்டா பாட்டீல்,யோகேஷ் நாயக் ஆகிய இருவரும் குண்டுவெடிப்பில்
காயமடைந்து பின்னர் உயிரிழந்து விட்டனர். 11 பேர் மீதும் சட்டவிரோத
நடவடிக்கை தடுப்புச் சட்டம் மற்றும் நாட்டின் மீது போர் தொடுத்தது ஆகிய பிரிவுகளின்
கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்கொண்டா பாட்டீல்,மகாராஷ்டிர
மாநிலம் சாங்கிலையச் சேர்ந்தவன். நாயக், கோவாவைச் சேர்ந்தவன். சனதான்
சன்ஸ்தாவின் தீவிர உறுப்பினர்களில் ஒருவன் பாட்டீல். இந்த அமைப்பு ஆர்.எஸ்.எஸுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டதாகும்.
0 comments:
கருத்துரையிடுக