செவ்வாய், 18 மே, 2010

தமிழகத்தில் மழை எச்சரிக்கை.


வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம், சென்னை & ஆந்திரா இடையே 2 நாளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் நாடு முழு வதும் கோடை வெப்பம் தகித்து வருகிறது. நேற்று புதுடெல்லியில் 45.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியது. இது மே மாதத்தில் கடந்த 8 ஆண்டுகளில் நிலவிய வெப்பத்தில் மிகவும் அதிகபட்சமாகும்.
இந்நிலையில் சென்னையில் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இன்று காலை 700 கிமீ அளவுக்கு நெருங்கியது. மேலும் புயல்சின்னமாகவும் மாறியது. இதற்கு ‘லைலா’ என பெயரிடப் பட்டுள் ளது. இதனால் பாம்பனில் முதலாம் எண் கூண்டு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் ஆந்திராவை நோக்கி நகருகிறது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி நாளை ஆந்திரவை தாக்கக்கூடும். இந்த புயல் எச்சரிக்கையால் வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழையோ அல்லது இடி யுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென் னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் வாய்ப்புள்ளது. தென்தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத் தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாங்குனேரியில் மட்டும் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அந்தமானில் வரும் 20&ந்தேதியும், கேரளாவில் வரும் 30&ந்தேதியும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக