வெள்ளி, 21 மே, 2010
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24 அல்லது மே 26ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24 அல்லது மே 26ம் தேதி வெளியாகும் என்று
தெரிகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வை 8.56
லட்சம் பேரும், தனித் தேர்வர்களாக 99,000 பேரும் எழுதினர். ஏப்ரல் 9ம்ம் தேதி
தேர்வுகள் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, தற்போது
மதிப்பெண் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதனால், எஸ்எஸ்எல்சி தேர்வு
முடிவுகள் வரும் திங்கள்கிழமை (மே 24) அல்லது புதன்கிழமை (மே 26) வெளியாக
வாய்ப்புள்ளதாக அரசுத் தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக