சனி, 15 மே, 2010
குமரி மாவட்டத்தில் முதல் 3 இடங்களை நாகர். அல்போன்சா பள்ளி தட்டி சென்றது
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 378 மாணவ, மாணவிகளில் 18ஆயிரத்து 916 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.54 சதவீத தேர்ச்சி விழுக்காடு ஆகும். இதில் மூன்று இடங்களையும் நாகர்கோவில் அல்போன்சா பள்ளி மாணவர் களே தட்டிச் சென்றனர். இப்பள்ளி மாணவர் லாய்சன் பெனிக்ஸ் 1178 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-192, ஆங்கிலம்-190, இயற்பியல்-197, வேதியியல்- 199, உயிரியல்-200, கணிதம்- 200.
இரண்டாம் இடத்தை இப்பள்ளி மாணவர் மஞ்சித் மகேந்திரன் பிடித்தார். இவர் 1174 மதிப்பெண்கள் எடுத்தார். தமிழ்-192, ஆங்கிலம்-188, இயற்பியல்-198, வேதியியல்- 200, உயிரியல்-196, கணிதம்- 200.
1171 மதிப்பெண்கள் எடுத்த இப்பள்ளி மாணவர் நோயல் ஜேம்ஸ் மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-192, ஆங்கிலம்-184, இயற்பியல்-196, வேதியியல்- 200, உயிரியல்-199, கணிதம்- 200.
0 comments:
கருத்துரையிடுக