சனி, 15 மே, 2010

பிளஸ் 2 தேர்வு: குமரி மாவட்டத்தில் 84.53 % தேர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 84.53 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2.97 சதவிகிதம் அதிகமாகும். இம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 9856 மாணவர்கள், 12522 மாணவிகள் உள்பட மொத்தம் 22378 பேர் எழுதினர். இதில் 7705 மாணவர்கள், 11211 மாணவிகள் உள்பட மொத்தம் 18916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம்- 84.53. மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் - 78.17, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 89.53. கடந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் 81.56 -ஆக இருந்தது. 
கல்வி மாவட்டவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 2971 மாணவர்கள், 3908 மாணவிகள் உள்பட மொத்தம் 6879 பேர் தேர்வு எழுதினர். இதில் 2553 மாணவர்கள், 3594 மாணவிகள் உள்பட மொத்தம் 6147 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம்- 89.35. மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்- 85.93, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 91.96. தக்கலை கல்வி மாவட்டத்தில் 3345 மாணவர்கள், 4404 மாணவிகள் உள்பட மொத்தம் 7749 பேர் தேர்வு எழுதினர். இதில் 2644 மாணவர்கள், 4002 மாணவிகள் உள்பட மொத்தம் 6646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம்- 85.76. மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்- 79.04, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 90.87. 
குழித்துறை கல்வி மாவட்டத்தில் 3540 மாணவர்கள், 4210 மாணவிகள் உள்பட மொத்தம் 7750 பேர் தேர்வு எழுதினர். இதில் 2508 மாணவர்கள், 3615 மாணவிகள் உள்பட மொத்தம் 6123 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவிகிதம்- 79.மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்- 70.84, மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம்- 85.86. கணிதத்தில் 44 பேருக்கு 200 மதிப்பெண்கள்:
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 44 பேர் கணிதத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டில் 126 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற பாடங்களில் இவ்வாண்டு 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வருமாறு:
வேதியியல்- 21, இயற்பியல்- 1, உயிரியல்- 3, கணினி அறிவியல்- 2, தாவரவியல்- 1, விலங்கியல்- 1, வணிகவியல்- 4, அக்கவுண்டன்சி- 3.
நன்றி: தினமணி 

0 comments:

கருத்துரையிடுக