இணையதளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் ‘செயலாளர், தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை&25’ என்ற முகவரிக்கு வரும் 31.5.2010க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் விநியோகம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜூன் 15ம் தேதி ‘ரேண்டம்’ எண் வழங்கப்படுவதுடன், ஜூன் 18ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். இணையதள முகவரி: www.annauniv.edu/tnea2010
திங்கள், 3 மே, 2010
மாநிலம் முழுவதும் இன்று பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழு வதும் 58 மையங்களில் இன்று (3ம் தேதி) முதல் விநி யோகம் செய்யப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் பொறி யியல் படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (3ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படு கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரி, நெல்லையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ராணி அண்ணா அரசு கலை கல்லூரி, தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக், எட்டயபுரம் பிசிஎம் அரசு பெண்கள் பாலிடெக்னிக் உட் பட தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்டி பிரிவுக்கு ரூ.250. விண்ணப்பங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தபால் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.இணையதளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் ‘செயலாளர், தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், சென்னை&25’ என்ற முகவரிக்கு வரும் 31.5.2010க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் விநியோகம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர வரும் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வரும் ஜூன் 15ம் தேதி ‘ரேண்டம்’ எண் வழங்கப்படுவதுடன், ஜூன் 18ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். இணையதள முகவரி: www.annauniv.edu/tnea2010
0 comments:
கருத்துரையிடுக