ஞாயிறு, 2 மே, 2010

தலித்களை மனநலம் குன்றியவர்களுடன் ஒப்பிட்ட நரேந்திர மோடி!

தாழ்த்தப்பட்ட மக்களையும் மனநலம் குன்றியவர்களையும் ஒப்பிட்டுப் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.சமீபத்தில் நரேந்திர மோடி எழுதிய சமாஜிக் சம்ரஸ்தா என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் பேசிய மோடி,
மனநலம் குன்றிய குழந்தைகள் உள்ளவர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது நாம் அந்தக் குழந்தைகளை எப்படி கவனித்துக் கொள்வோமோ அதே போல தாழ்த்தப்பட்ட மக்களையும் நாம் நடத்த வேண்டும் என்றார்.

மோடியின் இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பியான பிரவீன் ராஷ்ட்ரபால் ராஜ்யசபாவில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பி பேசுகையில், தலித்கள் குறித்த தனது எண்ணத்தை இந்தப் பேச்சு மூலம் நரேந்திர மோடி வெளிப்படுத்திவிட்டார். இது டாக்டர் அம்பேத்கரையே அவமானப்படுத்தியது போலாகும் என்றார். 
மக்களவையில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்பியான புனியா கிளப்பினார். அவர் பேசுகையில், நரேந்திர மோடியின் புத்தகத்தில் தலிக்களுக்கு விரேதமான ஏராளமான கருத்துக்கள் உள்ளன. இதனால் நரேந்திர மோடியைப் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக