வியாழன், 27 மே, 2010

‌மாத‌ம் முழுவது‌ம் வேலை நா‌ட்க‌ளி‌ல் மி‌ன் க‌‌ட்டண‌ம் செலு‌த்தலா‌ம்.

மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள முறையில் மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை மின்சார வாரியம் அமல்படுத்தியுள்ளது.
குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போது உள்ள முறையில் மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்திட மின் வாரியம் உத்தேசித்துள்ளது.
தற்போது உள்ள பிரதி மாதம் 16ஆம் தேதி முதல் மின் கணக்கீடு செய்தல், பிரதி மாதம் 1ஆம் தேதி முதல் வசூல் செய்யும் முறையை மாற்றி, இனி வரும் காலங்களில் 1ஆம் தேதி முதல் கடைசி வரை மின் கணக்கீடும், மின் கணக்கீடு முடிந்த இரண்டாம் நாளிலிருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. 
மின் கட்டணத்தை கணக்கிட்ட நாளிலிருந்து 20 நாட்களு‌க்குள் செலுத்த வேண்டும். இந்த புதிய முறை வரு‌ம் 1ஆ‌ம் த‌ே‌தி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் மூலம் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டு, எளிதாக மின் கட்டணம் செலுத்தும் வகையில் மின்நுகர்வோர் பயன்பெறுவர். இந்த புதிய திட்டத்தின் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த நாளிலிருந்து 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
உதாரணமாக ஒரு நுகர்வோர் மீட்டரில் கணக்கெடுப்பு செய்து வெள்ளை அட்டையில் பதிவு செய்த நாள் 1ஆம் தேதி எனில் அவர் தனது மின் கட்டணத்தை 20ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். அப்படி கட்டத் தவறினால் 21ஆம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
முன்பிருந்தது போலவே இரு மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யும் முறைதான் இந்த புதிய முறையிலும் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16ஆம் தேதிக்கு பதிலாக 1ஆம் தேதி தொடங்கும். எனவே மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மின்நுகர்வோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள

0 comments:

கருத்துரையிடுக