சனி, 15 மே, 2010
தாய்லாந்தில் வன்முறை: அயல்நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன
தாய்லாந்தில் செஞ்சட்டை போராட்டக்காரர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததால், அங்குள்ள பல்வேறு அயல்நாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன.
தாய்லாந்து பிரதமர் அபிசித் வெஜ்ஜாஜிவா முறைகேடாக பதவிக்கு வந்ததாக கூறி, அவர் பதவி விலக தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செஞ்சட்டை போராட்டக்காரர்கள் கடந்த பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவான ராணுவ அதிகாரி காட்டியா சவஸ்திபோலை அந்நாட்டு ராணுவமே நேற்று துப்பாக்கியால் சுட்டது. இதனால் கலவரம் வெடித்தது.
தங்களை கட்டுப்படுத்த முயன்ற இராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இராணுவ வாகனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
ஒரு பேருந்து தீ வைத்து கொளுத்தப்பட்டது.இதனையடுத்து அவர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் அதிகரித்து வரும் இந்த வன்முறையால் அங்குள்ள அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட பல்வேறு நாட்டு தூதரகங்களும் மூடப்பட்டன.
நன்றி: வெப்துனியா
0 comments:
கருத்துரையிடுக