சனி, 15 மே, 2010

தெஹ்ரிக் - இ - த‌லிபானை பயங்கரவாத இயக்க‌மாக அறிவிக்க அமெ‌ரி‌க்கா நடவடிக்கை

பாகிஸ்தானின் த‌லிபான் இயக்கமான தெஹ்ரிக் - இ - தலீபான் இயக்கம்தான் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கார் குண்டு வைத்து தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டது என்பது விசாரணையில் தெரியவந்ததால், அந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இந்த தகவலை வெளிநாட்டு இலாகா துணை அமை‌ச்சருமான குரோவ்லி தெரிவித்தார். மேலும் அவ‌ர் கூறுகையில், "இப்படி அறிவிப்பதற்கான சட்டப்பூர்வமான தேவைகள் என்ன என்ன என்பது குறித்தும் அதை எப்படி நிறைவு செய்வது என்பதிலும்தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்'' எ‌ன்றா‌ர் குரோவ்லி.
"கடந்த சில மாதங்களாகவே நாங்கள் அந்த இயக்கத்தை தடை செய்வது குறித்து யோசித்துக்கொண்டு இருந்தோம். நியூயார்க் கார்குண்டு ‌நிக‌ழ்வுக்கு பிறகு நாங்கள் அதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றும் குரோவ்லி தெரிவித்தார்.
நன்றி: வெப்துனியா

0 comments:

கருத்துரையிடுக