ஞாயிறு, 16 மே, 2010
மருத்துவக் கல்லூரிகளுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்.
மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல்
விநியோகிக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகள்
மற்றும் 9 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்
இது. நாளை முதல் விநியோகிக்கப்படும் இந்த விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள்
பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலமும் விண்ணப்பங்களைப்
பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக