தக்கலை காவல் கோட்டத்தை பிரித்த திருவட்டாரை தலைமையாக கொண்டு புதிய காவல் கோட்டம் அமைக்கப்பட வேண்டும். தக்கலை குற்றவியல் நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே குற்றவியல் நீதிமன்றத்தையும், உரிமையியல் நீதிமன்றத்தையும் ஒருங்கிணைத்து திருவட்டாரில் ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
ஞாயிறு, 16 மே, 2010
தக்கலையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் ரெஜினால்டு பேச்சு.
பயணிகளின் இடநெருக்கடியை தவிர்க்க தக்கலையில் புதிய
பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் ரெஜினால்டு எம்எல்ஏ பேசினார்.
வனம், சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
குறித்த மானிய கோரிக்கைகள் விவாதத்தின்போது சட்டசபையில் ரெஜினால்டு எம்எல்ஏ
பேசியதாவது:
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்ததற்கு பாடுபட்ட
மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்ற குமரி மக்களின் நீண்டகால
கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கல்குளம் தாலுகாவை பிரித்த திருவட்டாரை தலைமையிடமாக
கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும்.
தக்கலை காவல் கோட்டத்தை பிரித்த திருவட்டாரை தலைமையாக கொண்டு புதிய காவல் கோட்டம் அமைக்கப்பட வேண்டும். தக்கலை குற்றவியல் நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே குற்றவியல் நீதிமன்றத்தையும், உரிமையியல் நீதிமன்றத்தையும் ஒருங்கிணைத்து திருவட்டாரில் ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தக்கலை பஸ்
நிலையம் 1989ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இடநெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
எனவே தக்கலையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு
அவர் பேசினார்.
0 comments:
கருத்துரையிடுக