மாவட்ட தலைவர் பீர்முகமது முன்னிலை வகித் தார். இதில் தலைமை கழக பேச்சாளர் ஜெயினுல் ஆப்தீன், தமுமுக மாவட்ட செயலாளர் புரோஸ்கான், பொருளாளர் யூசுப், துணைத்தலைவர் ஜிஸ்தி முகமது, துணை செயலாளர்கள் அன்வர் உசேன், செய்யது அலி, அன்வர் சதாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உபைஸ், துணை செயலாளர்கள் கரீம், நூர்முகமது, ஜாக் பொறுப்பாளர் நூர்முகமது, பாப்புலர் பிரண்ட் பொறுப்பாளர் அப்துல் ஜப்பார், மறுமலர்ச்சி பொறுப்பாளர் முகமது அப்துல்காதர் மற்றும் குளச்சல் நகர தமுமுக தலைவர் அல் அமின் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 151 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
சனி, 1 மே, 2010
பள்ளிவாசல் கண்ணாடி உடைப்பு சிபிசிஐடி விசாரணை நடத்த கோரி குளச்சலில் தமுமுக ஆர்ப்பாட்டம்.
குளச்சல் பள்ளி வாசல் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில்
சிபிசிஐடி விசாரணை நடத்த கோரி தமுமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு அருகே உள்ளது மீரானியா பள்ளி
வாசல். இந்த பள்ளி வாசலில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து ஜன்னல்
கண்ணாடிகளை சேதப் படுத்தினர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து
கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்
பள்ளி வாசல் கண்ணாடிகளை உடைத்தவர்களை கைது செய்யாததை கண்டித்தும், சிபிசிஐடி
விசாரணை நடத்த கோரியும் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது. நகர தமுமுக செயலாளர் சாகுல் அமீது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பீர்முகமது முன்னிலை வகித் தார். இதில் தலைமை கழக பேச்சாளர் ஜெயினுல் ஆப்தீன், தமுமுக மாவட்ட செயலாளர் புரோஸ்கான், பொருளாளர் யூசுப், துணைத்தலைவர் ஜிஸ்தி முகமது, துணை செயலாளர்கள் அன்வர் உசேன், செய்யது அலி, அன்வர் சதாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உபைஸ், துணை செயலாளர்கள் கரீம், நூர்முகமது, ஜாக் பொறுப்பாளர் நூர்முகமது, பாப்புலர் பிரண்ட் பொறுப்பாளர் அப்துல் ஜப்பார், மறுமலர்ச்சி பொறுப்பாளர் முகமது அப்துல்காதர் மற்றும் குளச்சல் நகர தமுமுக தலைவர் அல் அமின் உட்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 151 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை யொட்டி எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில்
டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக