சனி, 1 மே, 2010

கடலடி ஆப்டிகல் பைபர் இண்டர்நெட் கேபிள் பழுது நீக்கம்.


வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பா இடையே கடலுக்கடியில் போடப்பட்டுள்ள ஆப்டிகல் பைபர் இண்டர்நெட் கேபிளில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டுவிட்டது.
இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்தியா  உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகள், வளைகுடா மற்றும் ஐரோப்பாவில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி கடந்த 15 நாட்களாக பாதிக்கப்பட்டது.
இந்தியாவின் பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு தான் இந்த 18,000 கி.மீ நீளமுள்ள SEA-ME-WE-4 என்ற கேபிள் சேவையை நடத்தி வருகின்றன.
இந்த கேபிளில் மத்திய தரைக்கடல் பகுதியில் சேதம் ஏற்பட்டதால் எகிப்து மற்றும் பிரான்ஸ் இடையே இண்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த தொடர்பு துண்டிப்பால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகள் பாதிக்கப்பட்டன. சேதம் ஏற்பட்ட கடல் பகுதியில் கடும் கொந்தளிப்பு நிலவியதால் இதை பழுதுபார்க்கும் பணியும் தாமதமாகிவிட்டது.
இன்று இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

0 comments:

கருத்துரையிடுக