வெள்ளி, 28 மே, 2010
நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக சிறப்பு பதிவு முகாம் துவக்கம்
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கு நேற்று முன்தினம்
முதல் அவர் கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்யப்பட்டு
வருகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை பெற்ற மாணவ மாணவியர் அவற்றை மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்ய துவங்கியுள்ளனர்.
இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் சிறப்பு
ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய இடங்களில்
சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் நேற்று முதல்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவுகள் துவங்கின. 29, 30 தேதி விடுமுறை நாட்கள் தவிர்த்து
வரும் ஜூன் 2ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு மாணவ
மாணவியர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய லாம்.
பிளஸ் 2 கல்வி தகுதியை புதிதாக பதிவு செய்ய வருவோர்
ரேஷன்கார்டு, சான்றொப்பம் செய்யப்பட்ட ரேஷன்கார்டு ஜெராக்ஸ், எஸ்.எஸ்.எல்.சி
மற்றும் பிளஸ் 2 மார்க்ஷீட், ஜாதி சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ் ஆகியன
கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி பதிவு
செய்த வர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் பிளஸ் 2 அசல் சான்றிதழை
மட்டும் எடுத்து வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலை பள்ளியில்
அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் முதல் முறையாக கல்வி தகுதியை பதிவு செய்யும்
புதிய பதிவுகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன் னையா கலந்துகொண்டார்.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே 10ம் வகுப்பு கல்வி
தகுதியை பதிவு செய்தவர்கள் தங்கள் பிளஸ் 2 கல்வி தகுதியை கூடுதலாக பதிவு செய்த னர்.
மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் புதுப்பதிவு
மற்றும் கூடுதல் பதிவுக்கு சிறப்பு மையம் திறக்கப்பட்டிருந்தது. மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் அங்கு பணிகளை மேற்கொண்டனர். காலை முதல் மாணவ
மாணவியர் திரளாக வந்து கல்வி தகுதியை பதிவு செய்தனர்.
முதல் நாளான நேற்று நாகர்கோவில் மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் 1023 பேரும், எஸ்.எல்.பி. பள்ளி மையத்தில் 388 பேரும், மார்த்தாண்டம்
மையத்தில் 1006 பேரும் என மொத்தம் 2417 மாணவ மாணவியர் தங்கள் கல்வி தகுதியை
பதிவுசெய்தனர். இதில் மாணவர்கள் 752, மாணவிகள் 1665 என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் 2417 பேர் பதிவு செய்தனர்

0 comments:
கருத்துரையிடுக