வெள்ளி, 7 மே, 2010
பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய முடியாது : பிரணாப் முகர்ஜி
பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி மேல்-சபையில், நிதி மசோதா மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.
இதற்கு பதில் அளித்து நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி பேசுகையில், "இப்போதைக்கு பெட்ரோலியம் பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்வதற்கு இல்லை. அதற்குரிய சூழ்நிலையும் தற்போது இல்லை. எனவே உறுப்பினர்கள் பொறுத்து கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
"பண வீக்கம் 17 சதவீதமாக உயர்ந்து இருக்கிறதே'' என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பிரணாப் முகர்ஜி, "உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். சாதாரண மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான், ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உணவு வழங்கல் துறையில் ஊழல் இன்றி, இந்த திட்டத்தின் நலன்கள் ஏழைகளுக்கு போய் சேருகிறதா? என்று கண்காணிக்க வேண்டியது, மாநில அரசுகள்தான்'' என்றார்
0 comments:
கருத்துரையிடுக