வெள்ளி, 7 மே, 2010

84 சதவீத அணுஆயுதங்களை அழித்து விட்டோம் அமெரிக்க ராணுவம் பிதற்றல்

அமெரிக்காவிடம் 5 ஆயிரத்து 113 அணுஆயுதங்கள் தான் இருக்கின்றன என்றும் 84 சதவீத அணுஆயுதங்களை அழித்து விட்டோம் என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி நிலவரப்படி எங்களிடம் 5 ஆயிரத்து 113 அணுஆயுச்தங்கள் தான் கையிருப்பில் இருக்கின்றன. 1967-ம் ஆண்டு அமெரிக்கா வசம் 31 ஆயிரத்து 255 அணுஆயுதங்கள் இருந்தன. 1989-ம் ஆண்டு ரஷியாவில் கம்ïனிஸ்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது 75 சதவீத அணுஆயுதங்களை அழித்து விட்டோம். அதன் பிறகு 1994-க்கும் 2009-க்கும் இடையில் 8748 அணுஆயுதங்கள் அழிக்கப்பட்டன. அதாவது 9 சதவீத அணுஆயுதங்கள் அழிக்கப்பட்டன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

0 comments:

கருத்துரையிடுக