புதன், 5 மே, 2010
இரவிபுதூர்கடை முஸ்லீம் மாணவி ஜப்பான் பயணம்
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் சார்பில், அந்நாட்டில் 10 நாள்கள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ள இரவிபுதூர்கடையை சேர்ந்த மாணவி மாஷா நஸீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வயதிலேயே சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளதை கெüரவப்படுத்தும் வகையில் இவரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். தனது 9 வயதிலிருந்து அறிவியல் படைப்புகளை உருவாக்கத் தொடங்கி, இதுவரை 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
இதற்காக 4 தேசிய விருதுகள், ஒரு சர்வதேச விருது, ஒரு தென்னிந்திய அளவிலான விருதை இவர் பெற்றுள்ளார். மிக இளைய வயதில் சர்வதேச மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அறிவியல் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.
ரயிலில் கழிவு அகற்றும் கருவி, நெருப்பின்றி சீல்வைக்கும் கருவி ஆகியவை தேசிய அளவில் பிரபலமான இவரது கண்டுபிடிப்புகளாகும். பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் இவரது கண்டுபிடிப்புகளைப் பாராட்டி கெüரவித்துள்ளன.
குடியரசுத் தலைவர், மத்திய ரயில்வே அமைச்சர், 3 மாநில ஆளுநர்கள், 4 முதல்வர்கள் ஆகியோரிடம் நேரில் தனது கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை அளித்துள்ளார். அண்மையில் இவரது நெருப்பின்றி சீல்வைக்கும் கருவியின் செயல்பாட்டை பார்த்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, அந்தக் கருவியை குஜராத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பயன்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுபோல, கேரள முதல்வர் அச்சுதானந்தன் முன்னிலையிலும் இக் கருவியின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவரது இளம் வயது சாதனைகளைக் கெüரவிக்கும் வகையில், ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு மத்திய அரசு இவரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு, அறிவியல் மற்றும் கலைகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை தனது நாட்டுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஐப்பான் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த 10 நாள் கல்விச் சுற்றுலா திட்டத்தில் புல்லட் ரயில் பயணம், பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள கல்வி மற்றும் அறிவியல் நிலையங்களுக்குச் செல்லுதல் ஆகியவை இடம்பெறுகின்றன. இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள இந்த கல்விச் சுற்றுலாவில் மாணவர்களுக்கு துணையாகச் செல்லும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, தேசிய அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சிறப்புமிக்க இந்த சுற்றுலாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்களில் மாஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் சார்பில், அந்நாட்டில் 10 நாள்கள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மாஷா நஸீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளம் வயதிலேயே சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளதை கெüரவப்படுத்தும் வகையில் இவரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். திருச்செங்கோடு வித்யா விகாஸ் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். தனது 9 வயதிலிருந்து அறிவியல் படைப்புகளை உருவாக்கத் தொடங்கி, இதுவரை 7 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்.
இதற்காக 4 தேசிய விருதுகள், ஒரு சர்வதேச விருது, ஒரு தென்னிந்திய அளவிலான விருதை இவர் பெற்றுள்ளார். மிக இளைய வயதில் சர்வதேச மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அறிவியல் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.
ரயிலில் கழிவு அகற்றும் கருவி, நெருப்பின்றி சீல்வைக்கும் கருவி ஆகியவை தேசிய அளவில் பிரபலமான இவரது கண்டுபிடிப்புகளாகும். பெங்களூர் இந்திய அறிவியல் கழகம், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் இவரது கண்டுபிடிப்புகளைப் பாராட்டி கெüரவித்துள்ளன.
குடியரசுத் தலைவர், மத்திய ரயில்வே அமைச்சர், 3 மாநில ஆளுநர்கள், 4 முதல்வர்கள் ஆகியோரிடம் நேரில் தனது கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை அளித்துள்ளார்.
கேரள முதல்வர் அச்சுதானந்தன் முன்னிலையிலும் இக் கருவியின் செயல்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவரது இளம் வயது சாதனைகளைக் கெüரவிக்கும் வகையில், ஜப்பானுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு மத்திய அரசு இவரைத் தேர்வு செய்து அறிவித்துள்ளது.
கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு, அறிவியல் மற்றும் கலைகளில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவர்களை தனது நாட்டுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை ஐப்பான் அரசு செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையம் மூலம் செயல்படுத்தப்படும் இந்த 10 நாள் கல்விச் சுற்றுலா திட்டத்தில் புல்லட் ரயில் பயணம், பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள கல்வி மற்றும் அறிவியல் நிலையங்களுக்குச் செல்லுதல் ஆகியவை இடம்பெறுகின்றன. இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள இந்த கல்விச் சுற்றுலாவில் மாணவர்களுக்கு துணையாகச் செல்லும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, தேசிய அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
சிறப்புமிக்க இந்த சுற்றுலாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவர்களில் மாஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக