வியாழன், 20 மே, 2010
ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஷெப்பர்ட் பேரோன் மரணமடைந்தார்.
உலகின் முதல் தானியங்கி முறையில்
பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த ஷெப்பர்ட் பேரோன் மரணமடைந்தார்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த ஷெப்பர்ட் பேரோன்
(84) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஆனால்
சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், 3 மகன்களும், 6 பேரன்
பேத்திகளும் உள்ளனர்.
வங்கியில் இருக்கும் நமது சொந்த பணத்தை,
வங்கி அலுவலக நேரத்திற்காக காத்திராமல் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும்
எடுத்துக்கொள்ளும் வசதியை கொண்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தை ஷெப்பர்ட் பேரோன்
கண்டுபிடித்ததே சுவராஸ்யமானது. ஒருமுறை வங்கியின் வேலை நேரம் முடிந்து
விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தன்னுடைய சொந்த பணத்தை தேவையான
நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டதே என அவர் மிகவும் மனவேதனை அடைந்தார். தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தான்
விரும்பிய நேரத்தில் எடுப்பதற்கு ஒரு வழி இருந்தால் என்ன என்று அவர் அப்போது
யோசித்தார்.
அவர் அவ்வாறு யோசித்துக்
கொண்டிருக்கும்போது, தானியங்கி எந்திரம் மூலமாக சாக்லேட்டுகளை வழங்கும் இயந்திரத்தை
பார்த்தார். இதேபோன்று பணத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தின் மாதிரியை வெற்றிகரமாக
உருவாக்கினார். இவர் உருவாக்கிய ஏடிஎம் மாதிரி இயந்திரம்,
கடந்த 1967 ஆம் ஆண்டில் வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடையே இந்த ஏடிஎம்
இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது உள்ளதுபோல ஏடிஎம் கார்டுகள்
உருவாக்கப்படவில்லை. அதற்கு பதிலாக சிறப்பு காசோலைகள் பயன்படுத்தப்பட்டன.
காசோலைகளை இயந்திரத்தில் வைப்பதற்கு
முன்பாக அடையாள எண்ணை தெரிவிக்க வேண்டும். முதலில் ஷெப்பர்டு 10 இலக்கம் கொண்ட
அடையாள எண்ணை( PIN number) உருவாக்கினார். ஆனால் அவற்றை நினைவில் கொள்வதில் தனக்கு
சிரமம் ஏற்பட்டதே போன்றே, தமது மனைவியும் புகார் கூறியதையடுத்து அதனை 4 இலக்கம்
கொண்டதாக மாற்றினார். அவர் அன்ற் உருவாக்கிய அதே நடைமுறைதான்
இன்றுவரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக