வியாழன், 20 மே, 2010
ஜூன் முதல் வாரத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்கிறது மத்திய அமைச்சரவை முடிவு
பூமியில் இருந்து எடுக்கப்படும் எரிவாயு விலையை இருமடங்காக
உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து விரைவில் பெட்ரோல், டீசல்
விலைகளும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆற்றுப்படுகைகள் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து
எடுக்கப்படும் எரிவாயுவை அரசின் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா
நிறுவனங்களிடமிருந்து வாங்குவதற்கான விலை இதுவரை ஒரு யூனிட்டுக்கு ரூ. 83ல் என
இருந்தது. இதை இருமடங்குக்கும் அதிகமாக ரூ. 195 ஆக உயர்த்த மத்திய
கேபினட் முடிவு செய்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட விலை ரிலையன்ஸ்
நிறுவனத்திடமிருந்து பெறும் எரிவாயுவுக்கும் பொருந்தும்.
இதனால் டெல்லியில் பைப் லைன் மூலம் விநியோகிக்கப்படும்
சமையல் எரிவாயு விலை கிலோவுக்கு ரூ 6 வரை உயர்கிறது. இதனால் ஆட்டோ, டேக்சி, பஸ்
கட்டணம் மற்றும் மின்கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்பையிலும் இதே நிலை
ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு விரைவில் வரவுள்ள பெட்ரோல், டீசல் விலை
உயர்வுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் கச்சா எண்ணை விலை உயர்வுக்கும்
உள்நாட்டு விற் பனை விலைக்கு¢ இடையே உள்ள வேறு பாடு கார ணமாக இந்திய எண்ணை
நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அவ்வப்போது அரசு பெட்ரோல்,
டீசல் விலையை சிறிது உயர்த்தினாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பெட்ரோல், டீசல்,
எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு
ஏற்ப எண்ணை நிறுவனங்களே நிர்ணயிக்க வகை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் இதில் ஒரு முடிவு எடுக்கப்படவேண்டிய நிலைக்கு
மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக எரிவாயு விலை
உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஜூன் முதல்வாரத்தில் நடக்கும் அமைச்சரவை
கூட்டத்தில் பெட்ரோல் விலையை நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய அனுமதிப்பது மற்றும் டீசல்
விலையை ரூ. 2 முதல் 3 வரை உயர்த்துவது என்பது குறித்து முக்கிய முடிவு
எடுக்கப்படும் எனத்தெரிகிறது.
எனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு
அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

0 comments:
கருத்துரையிடுக