ஞாயிறு, 30 மே, 2010

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு.


மும்பை: மே 21ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.12,57,474 கோடியாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து இரண்டு வாரங்களாக இது, சரிவடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இது ரூ.12,57,474 கோடியை எட்டியுள்ளது. இந்த அன்னியச் செலாவணி கையிருப்பில் இதர நாட்டு கரன்சிகள், தங்கம் இருப்பு ஆகியவையும் அடங்கும். இதற்கிடையே இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு 95 காசுகள் குறைந்துள்ளது. இதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.47.31 ஆக இருந்தது. இது, வெள்ளிக்கிழமை ரூ.46.36 ஆகக் குறைந்தது. கடந்த வாரத்தில் இந்திய நிறுவனனப் பங்குகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் டாலர் வரத்து அதிகரித்து, ரூபாய்க்கு எதிராக அதன் மதிப்பு சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக