வெள்ளி, 7 மே, 2010

அயர்லாந்தில் விமானங்கள் பறப்பதற்கு மீண்டும் தடை

ஸ்லாந்தில் உள்ள எரிமலை மீண்டும் சீற்றத்துடன் குழம்புகளை கக்கி வருகிறது. இதனால் எரிமலை சாம்பல் காற்றில் கலந்து தெற்கு நோக்கி வீசிவருகிறது. இதனால் கடந்த புதன்கிழமை காலை முதல் அண்டை நாடான அயர்லாந்தில் விமானங்கள் பறப்பது நிறுத்தப்பட்டன. டப்ளின் நகரில் உள்ள விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அந்த நகரத்துக்கு விமானங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று பலமணி நேரங்களுக்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஷனான் நகரில் உள்ள விமானநிலையத்தில் விமானப்போக்குவரத்து வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன

0 comments:

கருத்துரையிடுக