இதன்மூலம் வருவாய் ரூ. 88,356 கோடியிலிருந்து ரூ. 86,644 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் மொத்தத்தில் ரூ. 1,700 கோடி வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீண்ட காலத்துக்குப் பின் முதன்முறையாக ரயில்வேத்துறை நஷ்டத்தை சந்திக்கும் என்று தெரிகிறது. ஆனால், ரயி்ல்வேயிடம் உள்ள தேய்மான ரிசர்வ் நிதியில் இந்த நஷ்டத்தைக் கழித்துவிட்டு, லாபத்தில் இயங்குவது போல கணக்குக் காட்டிவிட முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
செவ்வாய், 18 மே, 2010
நஷ்டத்தை நோக்கி பயணிக்கும் இந்திய ரயில்வே!
2009-10ம் ஆண்டில் இந்திய ரயில்வேயின் வருவாயில் ரூ. 1,700 கோடி இழப்பு
ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில்வேத்துறை நிதிப் பற்றாக்குறையை நோக்கி பயணிக்க
ஆரம்பித்துள்ளது.
முன்னதாக ரயில்வேயின் உபரி வருவாய் ரூ. 2,642 கோடியாக
இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட
ரயில்வே பட்ஜெட்டில் இந்த நிதி ரூ. 951 கோடியாகக்
குறைக்கப்பட்டது. முன்னதாக சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ. 58,715
கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலம் ரூ. 24,057 கோடியும் வருவாய் கிடைக்கும்
என மதிப்பிடப்பட்டது. ஆனால், இதில் ரூ. 755 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன்
பிற வகையான வருவாய் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிதியும் ரூ. 950 கோடி
வரை குறைந்துவிட்டது.
இதன்மூலம் வருவாய் ரூ. 88,356 கோடியிலிருந்து ரூ. 86,644 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் மொத்தத்தில் ரூ. 1,700 கோடி வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நீண்ட காலத்துக்குப் பின் முதன்முறையாக ரயில்வேத்துறை நஷ்டத்தை சந்திக்கும் என்று தெரிகிறது. ஆனால், ரயி்ல்வேயிடம் உள்ள தேய்மான ரிசர்வ் நிதியில் இந்த நஷ்டத்தைக் கழித்துவிட்டு, லாபத்தில் இயங்குவது போல கணக்குக் காட்டிவிட முடியும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ரயில்வேயின் இந்த நஷ்டத்துக்கு எரிபொருள் விலை உயர்வு,
ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுகள், ரயில்வேயின் பிற முக்கிய செலவுகள்
அதிகரித்துவிட்டதும் ஒரு காரணமாகும்.
.jpg)
0 comments:
கருத்துரையிடுக