வெள்ளி, 21 மே, 2010
தென்மண்டல இஸ்லாமிய சட்ட கருத்தரங்கு.
தமிழ்நாடு முஸ்லிம் லா அகாடமி (தென்மண்டலம்) மற்றும் குமரி
மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பும் இணைந்து இஸ்லாமிய சட்ட கருத்தரங்கு
திருவிதாங்கோடு முஹ்யித்தீன் பள்ளி அரங்கில் நடத்தியது.
குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் ஜி.எம்.ஷா
தலைமை வகித்தார். திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் மவுலவி ஷாகுல்ஹமீது கிராஅத்
ஓதினார். கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ஏ.கான் வரவேற்றார். மாவட்ட தலைமை ஹாஜி
சுபூலாலிஹ் ஆசிம், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல்லா இஸ்மத்,
திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாஅத் தலைவர் குலாம் முஹைதீன், அஞ்சுவன்னம் ஜமாஅத் தலைவர்
சிராஜூதீன், தக்கலை அஞ்சுவன்னம் அசோசியேஷன் தலைவர் அப்துல்கபூர், தமிழ்மகன் உசேன்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு முஸ்லிம் லா அகாடமியின்
பொதுச்செயலாளர் ஜாபர்அலி கலந்து கொண்டு கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார்.
முன்னாள் சட்டக்கல்லூரி பேராசிரியர் அபுல்கலாம், உயர்நீதிமன்ற வக்கீல் அசீம்
ஆகியோர் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படை மற்றும் ஷரியத் சட்டம் குறித்து பேசினர்.
திருவிதாங்கோடு அல்ஜாமியா அன்வர், அரபிக்கல்லூரி தலைவர் மீரான் மைதீன் நன்றி
கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக