வெள்ளி, 25 ஜூன், 2010
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து விமான பயணக் கட்டணத்தின் மீது 10 விழுக்காடு சேவை வரி.
2010-11ஆம் ஆண்டிற்கான நிதி நிலை
அறிக்கையில் கூறப்பட்டதற்கு இணங்க வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து விமான பயணக்
கட்டணத்தின் மீது 10 விழுக்காடு சேவை வரி விதிப்பு நடைமுறைக்கு வரும் என்று மத்திய
அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வருவாய்த் துறை
வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, அனைத்து வகுப்பு
விமானப் பயணக் கட்டணத்தின் மீதும் குறைந்தது ரூ.100 அல்லது 10 விழுக்காடு கட்டணம்
வசூலிக்கப்படும். இதன் மூலம் அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.600 முதல் 1,000 கோடி வரை
வருவாய் கிடைக்கும். உள்நாட்டு, அயல் நாட்டு பயணங்கள் அனைத்தின்
மீதும், அனைத்து வகுப்புப் பயணச் சீட்டுகள் மீதும் இந்த சேவை வரி விதிக்கப்படும்
என்று அந்த அறிவிக்கை தெரிவிக்கிறது.

0 comments:
கருத்துரையிடுக