வெள்ளி, 25 ஜூன், 2010
நாகர்கோவிலில் தவ்ஹீத் ஜமாஅத் பைக் பேரணி.
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையை அமுல் படுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜூலை 4ம் தேதி சென்னையில் ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்கான முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பைக் பேரணி நடந்தது.பேரணி பறக்கை விலக்கில் துவங்கியது. மாவட்ட தலைவர் ஜெலீல் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் ஹாஜா நூஹ் பேசினார். பேரணியில் மாவட்ட செயலாளர் நாசர், பொருளாளர் சாகுல், துணைத்தலைவர் ஜாபர், நிர்வாகிகள் சலீம், சாகுல், உள்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி இடலாக்குடி வழியாக சென்று இளங்கடையில் முடிவடைந்தது.

0 comments:
கருத்துரையிடுக