செவ்வாய், 29 ஜூன், 2010

ஒரே மாதத்தில் 16.3 மில்லியன் புதிய செல்போன் இணைப்புகள்


கடந்த மே மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் 16.3 மில்லியன் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாக தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள மொத்த தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 653.92 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயர்லெஸ் போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 601.22 மில்லியனாக இருந்தது. இது மே மாதத்தில் 617.53 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2.71 சதவீத வளர்ச்சியாகும். வயர்லெஸ் போன்கள் பிரிவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக அளவிலான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. அதன் எண்ணிக்கை 133.6 மில்லியனாக உயர்ந்துள்ளது. வோடோன் சந்தாதாரர் எண்ணிக்கை 106.3 மில்லியனாகவும், ஐடியாவின் எண்ணிக்கை 1.43 மில்லியனாகவும், ஏர்செல்லின் எண்ணிக்கை 1.60 மில்லியனாகவும் உயர்ந்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக