செவ்வாய், 29 ஜூன், 2010

துபாய் வாழ் வெளிநாட்டவர்களில் 75% இந்திய, ஆசியர்களிடம் மருத்துவக் காப்பீடு இல்லை

துபாயில் வாழும் வெளிநாட்டவர்களில் 75 சதவிகித இந்தியர்கள் மற்றும் ஆசியர்களிடம் சுகாதார காப்பீடு இல்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.  துபாய் சுகாதார துறையின் பாலிசி மற்றும் யுக்தி பிரிவின் தலைவர் லைலா அல் ஜஸ்மி மேற்கொண்ட இந்த கணக்கெடுப்பில் எத்தனை பேர் உடல் நலப் பேனலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதைப் பொருத்தே எமிரெட்டில் உடல் நலப் பேனல் பாலிசிகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.  இந்த கணக்கெடுப்பில் 50,000க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.  சர்க்கரை நோய் 16 சதவிகித யு.ஏ.இ பிரஜைகளையும், 8 சதவிகித வெளிநாட்டவர்களையும் பாதிக்கிறது என்று அந்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதிக இரத்த அழுத்தம் வெளிநாட்டவர்களைவிட உள்நாட்டவர்களுக்கே அதிகம் உள்ளதென்று முதன்முதலாக எடுக்கப்பட்ட துபாய் குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக