வியாழன், 3 ஜூன், 2010

சுசீந்திரம் காப்பகத்தில் சித்ரவதையா? மீட்கப்பட்ட குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரணை.


சுசீந்திரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் தங்கியிருந்த 17 குழந்தைகளிடமும் காப்பக செயல்பாடுகள் குறித்து தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த காப்பகத்தை நடத்திய போதகர் தலைமறைவாகியுள்ளார்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த காப்பகத்தில் தங்கி இருந்த 76 வெளி மாநில குழந்தைகளை கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அதிகாரிகள் மீட்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகத்தில் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி காப்பகம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து இருந்தது. அதிகாரிகளின் கெடுபிடியால் சில காப்பகங்கள் மூடப்பட்டன. ஆனால் ஒரு சில காப்பகங்கள் மறைமுகமாக செயல்பட்டு வந்தன.
இந்த நிலையில் நாகர்கோவில் அடுத்த சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் தெற்கு தெருவில் போதகர் டைட்டஸ் துரைசிங் (30) என்பவர், அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்துவதாக சமூக நலத்துறைக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. நடராஜன் தலைமையில் அதிகாரிகள் குறிப்பிட்ட காப்பகத்தில் நேற்று (புதன்) மாலை அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் கூடிய சிறிய அறையில் 17 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த இடம் ஜெபக்கூடமாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த குழந்தைகளை அதிகாரிகள் மீட்டு நெல்லையில் உள்ள சரணாலயத்திற்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் 3 வயது முதல் 15 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.
இதற்கிடையில் அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்த போது போதகர் டைட்டஸ் துரைசிங் அங்கிருந்து நைசாக தப்பியோடி விட்டார். மீட்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
நெல்லை அருகே உள்ள சங்கன்திரட்டைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் சந்திரலேகா, மகன் விஜயசிவா ஆகியோரும் அந்த காப்பகத்தில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். இதுகுறித்து சந்திரலேகா கூறும்போது, எனது தந்தை கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று விட்டார். அதன்பிறகு எங்களை கவனிப்பதற்கு ஆள் இல்லாததால் நல்லூர் காப்பகத்தில் சேர்ந்தோம் என்றார்.
இதேபோல் ஒழுகினசேரியைச் சேர்ந்த விஜய் (12), முத்துலட்சுமி (6), அவரது தம்பி மணி (4), ராஜேஷ் (7), மேலபுத்தேரி ராக்சன்டேனியல் (10), தோவாளை மணிகண்டன் (15), அவரது தம்பி முத்து (9), வெள்ளிச்சந்தை வினு (5), அவனது தங்கை அனு (3), சந்தையடி சக்திவேல் (9), பிரசாந்த் (7), நல்லூர் ஜெயராஜன் (7), அவனது தம்பி அபின் (5) உள்ளிட்ட 17 பேர் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் இக்குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இல்லை. ஒரு சில குழந்தைகளின் பெற்றோர் தகராறு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மீட்கப்பட்டு சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்து ஒருசில குழந்தைகளின் பெற்றோர் இன்று சரணாலயத்திற்கு வந்து தங்கள் குழந்தைகளை கட்டியணைத்து அழுதனர். இந்த காட்சி உருக்கமாக இருந்தது.
பெற்றோரை பார்த்து கதறிய பரிதாபம் 

0 comments:

கருத்துரையிடுக