புதன், 2 ஜூன், 2010
மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் இல்லத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவிடம் இது தொடர்பான விவரங்களை அலுவலர்கள் சேகரித்து உரிய படிவங்களில் பதிவு செய்தனர். ஆட்சியரின் வீட்டு எண், வீட்டிலுள்ள உறுப்பினர்கள், குடும்ப தலைவர், குடியிருக்கும் வீடு சொந்தமானதா, வாடகை வீடா, வீட்டில் திருமணமான தம்பதியர், குடிநீர் ஆதாரம், மின்சார வசதி, கழிப்பிட வசதி, குளியலறை வசதி, சமையல் வசதி, எரிவாயு இணைப்பு உள்ளதா, ரேடியோ, டிவி இருக்கிறதா, தொலைபேசி, செல்பேசி உள்ளதா, கம்ப்யூட்டர், லேப்டாப் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறதா, வாகனவசதி, வங்கிச் சேவை மற்றும் முழுப் பெயர், பிறந்த தேதி, தேசியம், தற்போதைய முகவரி மற்றும் வசிக்கும் காலம், நிரந்தர முகவரி, திருமண நிலை, கல்விநிலை, தொழில், பெற்றோர் இதுபோன்ற விவரங்களை கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்டு பதிவு செய்து கொண்டனர்.

0 comments:
கருத்துரையிடுக