புதன், 9 ஜூன், 2010

அயல்நாடுகளில் வருமான வரி அலுவலகங்கள்: பிரணாப் முகர்ஜி.


மத்திய அரசு அமெரிக்கா, பிரிட்டன் உட்பட எட்டு நாடுகளில் வருமான வரித்துறை அலுவலகங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இவை வரி தொடர்பான தகவல்களை அளிப்பதற்காக அமைக்கப்பட உள்ளன என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 
தற்போது மத்திய அரசின் சிங்கப்பூர், மொரிசியஸ் ஆகிய இரு நாடுகளிலும் வருமான வரி அலுவலங்கள் இயங்கி வருகின்றன. 
அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், சைப்ரஸ், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகங்களில் அலுவலகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 
வருமான வரித்துறை இயக்குநர்கள், தலைமை ஆணையாளர்களின் ஆண்டு மாநாட்டில் பேசுகையில், அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான், சைப்ரஸ், ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளில் வருமான வரித்துறை அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளது. 
அயல்நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு வரி தொடர்பான தகவல்களை அளிப்பதற்கும், இரட்டை வரி விதிப்பு முறையைத் தடுப்பதற்கும், இந்திய வரித்துறை அலுவலகங்கள் உதவும். இரட்டை வரி விதிப்பு முறையைத் தடுப்பதற்காக 65 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரணார் முகர்ஜி கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக