வியாழன், 10 ஜூன், 2010
பலஸ்தீன் எதிர்ப்புப் பேராட்டத்திற்கு அனைத்து அறபுநாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்
குத்பா பிரசங்கத்தில் ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி:
அனுப்பியவர்: (திருவை) அபூ தாஹிர்
இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை யிட்டு ஷெய்க் கர்ளாவி அவர்கள் கட்டாரின் உமர் பின் கத்தாப் பள்ளி வாயலில் ஆற்றிய குத்பா பிரசங்கத்தில், இஸ்ரேல் உருவாக்கப் பட்டு 62 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், சியோனிஸ எதிரியின் உருவாக்கம் மிகவும் வேதனைக் குரிய, மறக்க முடியாத ஓர் அனுப வம் என தெரிவித்துள்ளார்.
1948ல் நடைபெற்ற வன்முறை கள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகளுக்கு 62 வயதாகிவிட்டது. இதை முஸ்லிம்களும் அறபு மக்களும் ஒருபோதும் மறக்கக் கூடாது. 62 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் என்ற ஒன்று இருக்கவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வாறு உமர் பின் அல் கத்தாப் பள்ளி வாயலில் நடைபெற்ற குத்பா பிரசங்கத்தின்போது கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித் தார்.
சமாதான முயற்சிகள் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை எதுவும் நடைபெறவில்லை. பயனற்ற முயற்சிகளின் உள்ளடக்கமாகவே அவை இருந்தன. நம்மில் இன்னும் சிலர் இஸ்ரேலிடமிருந்து சமாதானத்தையும் அமைதியையும் பிச்சை கேட்கின்றனர். ஆனால், எதிர்ப்புப் போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் அனை வரும் ஆதரவு வழங்குவோம். ஏனெனில், இஸ்ரேலுடனான எமது போராட்டம் இராணுவ, அரசியல், சமய, கலாசார, பொருளாதார ரீதியானது.
அறபு நாடுகள் பலஸ்தீன் எதிர்ப்புப் போராட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை யும் பண பலத்தையும் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் உற்பத்திப் பொருட்களைப் பகிஷ்கரிப்பதும் வாஜிபாகும். பலஸ்தீனக் குழுக்களும் அறபு நாடுகளும் இஸ்ரேலுக்கெதி ரான ஜிஹாதில் ஒன்று பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுக் கின்றோம்.
இஸ்ரேலுடன் சுமுகமான உறவுகளை வைத்துள்ள அறபு நாடுகள் குறித்து நான் கவலை யடைகின்றேன். சில அறபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை நிராக ரித்துள்ளபோதும் சில நாடு கள் இன்னும் சியோனிஸ நாட்டுடன் ராஜதந்திர உறவுகளை வைத்திருக்க விரும்புகின்றன. சில நாடுகள் ரகசியமாக இந்த உறவு களைப் பேணி வருகின்றன.
கடந்த பல தசாப்தங்களாக இஸ்ரேல் ஒரு அநீதியான உருவாக் கம் எனவும் அது உலகப்படத்திலி ருந்து துடைத்தழிக்கப்பட வேண் டும் எனவும் நாம் கோரி வந்தோம். ஆனால், நிலைமை தற்பொழுது வித்தியாசமாக உள்ளது. பலஸ்தீன் எமது இஸ்லாமிய உம்மத்தினால் மறக்கப்படக் கூடாது. சியோனிஸ எதிரிகளுக்கு எதிரான யுத்தத்தில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிப்பது எங்கள் ஒவ்வொருவரின தும் கடமையாகும்.
எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் மாத்திரமே நாம் எமது உரிமைகளை தக்கவைக்க முடியும். 62 ஆண்டுகால வரலாற்றில் மில்லியன் கணக்கான பலஸ்தீனர்கள் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவேண் டும்.
1948ல் அகதிகளாக வெளியேறிய பலஸ்தீனர்கள் 62 ஆண்டுகளாகவும் தாம் அலைக்கழிந்து திரிவோம் என்பதை கற்பனை செய்துகூட பார்த்த்திருக்க மாட்டார்கள். இன்று இஸ்ரேலுக்கு எதிரான ஒரு முழு அளவிலான எதிர்ப்புப் போராட்டமே உடனடித் தேவையாகும். இதற்கு அனைத்து அறபு நாடுகளும் ஒன்றுபட வேண்டும் என ஷெய்க் கர்ளாவி தனது குத்பா பிரசங்கத்தின்போது தெரிவித்தார்.

0 comments:
கருத்துரையிடுக