வெள்ளி, 4 ஜூன், 2010

பன்றிக்காய்ச்சலுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு : இன்று முதல் விற்பனை

பன்றிக்காய்ச்சலுக்கு முதன்முதலாக இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சல் நோய் உலகையே அச்சுறுத்தி வந்தது. இந்நோய்க்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். எனினும் இதற்கு தடுப்பு மருந்து இல்லாமல் மக்கள் திணறிவந்தனர். இந்நிலையில், பன்றிக்காய்ச்சலுக்கு முதன்முதலாக இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்த கேடிலா ஹெல்த்கேர் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது மருந்து கண்டுபிடித்துள்ளனர். 'வேக்சிப்ளூ-எஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸாத் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இது இன்று முதல் விற்பனைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக