வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம்: ஒபாமா

ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதங்களை ஈராக் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஈராக் மீது 2003 ஆம் ஆண்டு படையெடுத்தார். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஒபாமா, போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க படைகள் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி படிப்படியாக அமெரிக்க ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். இந்நிலையில், ஏறக்குறைய 8 ஆண்டுகள் நடந்த இந்த போர் முடிவுக்கு வந்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கொள்கை அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவர், ஈராக் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு இனி அந்நாட்டு மக்களின் பொறுப்பு என்றும், அந்நாட்டின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா இது வரையிலும் மிகப் பெரிய விலையை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக